Thai pongal in tamil,Kaanum pongal, Bhogi pongal in tamil

By | October 19, 2018

Thai pongal in Tamil

பொங்கல்! அறுவடைத் திருநாளாக, நன்றி செலுத்தும் நாளாக, உழவர் தினமாக உலகத் தமிழ் மக்கள் கொண்டாடுகிறார்கள், பொங்கல் என்பதற்கு பொங்கிப் பெருகி வருவது என்று பொருள். நம் தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழா, இந்த திருவிழா இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, மொரீஷியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் மிக மிக விமரிசையாக தமிழ்மக்கள் கொண்டாடுகிறார்கள்,
பொங்கல் திருவிழா எப்பொழுது தோன்றியது என்று தெரியவில்லை ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பண்டிகை கொண்டாட பட்டு வருகிறது, சோழர் மன்னர் காலத்தில் பொங்கல் திருவிழா புதியீடு என்று பெயர் இருந்தது, இதற்கு ஆண்டின் முதல் அறுவடை நாள் என்று பொருள்,
தமிழ் உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில், முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்துள்ளது இது பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என கூறுகிறார்கள்.

Bhogi Pongal in Tamil

பொங்கல் பண்டிகை நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது, முதல் நாள் போகி பண்டிகை ஆகும். இரண்டாவது நாள் பொங்கல் பண்டிகை நாள். மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல்.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற மொழிக்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது, போகி பண்டிகையன்று, மக்கள் அதிகாலையில் குளித்து, வீட்டை சுத்தம் செய்து அதில் உள்ள தேவையற்ற பழையை பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள்.

Happy Pongal In Tamil language 

அதிகாலையில் வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசை, கிழக்கு நோக்கி பொங்கல் இடுவார்கள், அதற்க்கு முன்னர் புதுப்பானை எடுத்து, குங்குமமும் சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் வைத்து, புதுப் பாலில் அல்லது தண்ணீரலில் புது அரிசி கலந்து பொங்கலிடுவார்கள், பொங்கி வரும்போது குலவையிட்டும, பொங்கலோ பொங்கல், என்று சொல்லுவார்கள்

அன்றய திருநாளில் தமிழ் மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொது , பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லி பொங்கல் நல்ல பொங்கிட்டா என்று கேட்பார்கள், நன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல வளமும், நலமும் நிலவும் என்பது ஒரு ஐதீகம்

Mattu Pongal in Tamil

மாட்டுப் பொங்கல் விழா, ஆண்டெல்லாம் நமக்காக உழைக்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் தினமாக இது அனுசரிக்கப்படுகிறது , கிராமங்களில் மாட்டுப் பொங்கள் மிக விமரிசையாக கொண்டாடப்படும், கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு புது வர்ணம் பூசி அலங்காரம் செய்து பூ மாலை இட்டு, கால்நடைகள் இருக்கும் இடத்தில் பொங்கல் இட்டு வழிபாடு செய்வார்கள். பின்னர் மாடுகளுக்கு பொங்கலும் பழமும் கொடுக்கப்படும், இன்றைய தினத்தின்போது மாடுகளுக்கு கழுத்தில் புது மணி கட்டி, வெளியில் திரிய விடுவார்கள்.

அதுபோல பொங்கல் திருவிழாவின்போது கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டு மிக விசேஷமானவை. மனா மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, ஜல்லிக்கட்டுக்கு மிகவும் பிரபலம். இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்ற விளையாட்டு
நான்காவது நாள் காணும் பொங்கலாக வட மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது உற்றார், உறவினர், நண்பர்களைக் கண்டு வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் பரிமாறிக் கொள்ளும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் மூன்று முக்கிய அம்சங்கள், கரும்பு, ஜல்லிக்கட்டு, வெண்-இனிப்புப் பொங்கல்தான். இவை இல்லாமல் பொங்கல் நிறைவடையாது, வரும் தமிழ் ஆண்டில் எல்லா வளமும், நலமும் பெற்று அமைதியுடன் வாழ சூரியக் கடவுளைப் பிரார்த்திப்போம், பொங்கலோ பொங்கல்!

see also

pongal festival in english

1. happy pongal in tamil font
2. what is pongal in tamil
3. happy pongal in tamil words
4. pongal in tamil language
5. happy pongal in tamil words